கல்யாண எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது

இலங்கையில் உளநல மேம்பாட்டை ஏற்படுத்த ஆர்வமுள்ள அதற்க்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் 40ற்கும் மேலான வெவ்வேறு தொழில்சார் வல்லுனர்களின் ஒருங்கிணைப்பினால் கல்யாண ஆரம்பிக்கப்பட்டது.

எமது காலவரையறை

  • 2019 ஜூலை - தொடக்க எண்ணக்கரு தொடர்பான கலந்துரையாடல்

    அமேந்திர (ஹரின்) டீ எஸ் விஜயரத்ன அவர்கள் இலங்கையில் மக்களின் உளவியல் மேம்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக உளவியல் பயிற்சி கூடம் (mind gym) என்னும் அமைப்பை தோற்றுவிக்கும் நோக்கத்தை ரேக்கா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் பகிர்ந்துகொண்டு முதற்படியாக தன்னார்வலர்களின் சமூகமொன்றை உருவாக்கினார்.

  • ஜூலை - ஆகஸ்ட் 2019 - குறுகிய எதேச்சையான இணையத்தள கருத்துக்கணிப்பு

    2 வார காலத்தினுள் எதேச்சையான முறையில் 300 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய இணைய வழியிலான கருத்துக்கணிப்பு ஒன்று நடாத்தப்பட்டது. இதன்போது அதிர்ச்சியளிக்கும் விதமாக பெரும்பான்மையான  பங்கேற்பாளர்கள் உளநல கோளாறுகளினால் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 20% ஆனவர்கள் மாத்திரமே தொழில் தேர்ச்சிபெற்ற உளவியல் நிபுணர்களின் உதவியை நாடுவதாகவும் அந்தக் கருத்துக்கணிப்பில் கண்டறியப்பட்டது.

  • ஆகஸ்ட் 18 2019 - கல்யாண அமைப்பு தோற்றம்பெற்றது

    உளரீதியான நோய்களை தவிர்த்துக்கொள்ளல் , முன்கூட்டியே அவற்றை இனங்கண்டு அறிந்துகொள்ளல் மூலம் இலங்கையில் உளவியல் சுகாதார மேம்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பாக அரை நாள் கருத்தமர்வு ஒன்று நடாத்தப்பட்டது.

    இக்கருத்தமர்வில் சுகாதாரத்துறை, தனியாரத் துறை, புத்திஜீவிகள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய தனிநபர்கள் உள்ளடங்கிய 40 பேர் கலந்து கொண்டனர். இந்தியாவை சேர்ந்த  இரண்டு உளவியலாளர்களும் ஒரு உளவியல் நிபுணரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர். பல்துறைப்பட்ட நபர்களின் பங்கேற்பினால் இதன்போது திடமான கருத்துக்களும் எண்ணங்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

    இக்கலந்துரையாடலில் இலங்கையில் உளவியல் சுகாதாரம் தொடர்பான தற்போதைய நிலவரம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அதன்போது பின்வரும் முக்கிய 5 விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

    1. மக்களை விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களது களங்கத்தை நீக்குதல்
    2. நிதி திரட்டுதல்
    3. கொள்கை அடிப்படையில் ஆராய்தல்
    4. திறன்விருத்தி பயிற்சிகள் மற்றும் மேம்பாடுகள்
    5. செயற்திட்டங்களை இனம்காணல் (உளவியல் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளை இனங்காணல்)
  • செப்டெம்பர் 2019 - ஜனவரி 2020 வெளிநபர் தொடர்புகள் தொடர்பாக பின்தொடர்தல்

    சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உளநலம் தொடர்பாக காணப்படும் களங்கத்தை அகற்றுதல் தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இதன்போது முக்கிய 3 விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

    சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முதற்கட்டமாக  கல்யாண இணையத்தளம் வெளியிடப்பட வேண்டும். இதன் ஊடாக உளநல பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்ளவும் முன்கூட்டியே இனம்கண்டு சுகப்படுத்த இலங்கையில் இருக்கும் பாரம்பரிய அல்லது மாற்று சிகிச்சை வளநிலையங்கள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய விபரக்கோர்ப்பு ஒன்று வெளியிடப்பட வேண்டும்

    சமூக வலைத்தளங்கள் ஊடாக விழிப்புணர்வை ஏற்படுத்துதல். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் வழியான விழிப்புணர்வு கருத்துருவாக்கங்களை பகிருதல்; இலங்கையை போலவே சர்வதேச ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியாக பெறக்கூடிய ஏனைய கருவிகள் தொடர்பாக ஆராய்தல்; சமூக வலைத்தள பிரபலங்களின் ஊடாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பில் ஆராய்தல்.

  • நவம்பர் 4 2019 - மார்ச் 2020 - தேசிய உளநல நிறுவனத்துடன் ஒன்றிணைதல்

    (கோவிட்-19 இன் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது)

    கல்யாண ஒன்றிணைப்பு தேசிய உளநல நிறுவனத்துடன் இணைந்து செயற்படக்கூடிய வழிகள் முன்னெடுக்கப்பட்டன.

    புதிய தலைமுறைக்கும் மூத்த தலைமுறைகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்பாடல் இடைவெளியை சரிசெய்யும் முகமாக நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்தல் 

    மார்ச் 16, 2020 ம்  திகதி நிநேந்திர வினால் 50 வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களின் பங்கேற்பில் நிகழ்ச்சியொன்றை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் கோவிட்-19 இன் தாக்கம் காரணமாக அதனை பிற்போடவேண்டிய நிலை ஏற்பட்டது. 

     

    தேசிய உளநல நிறுவன இணையத்தளத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள்

    தேவைகள் தொடர்பான பட்டியல்களை தயாரித்தல்

  • நவம்பர் 2019 - கண்டி உளநல மருத்துவமனைக்கு உபகரணங்களை நன்கொடையாக வழங்கள்

    (இடைநிறுத்தப்பட்டுள்ளது)

    அவுஸ்திரேலியா நாட்டில் பிரிஸ்பேன் இல் உள்ள இலங்கை சமூகத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்டவற்றை கண்டி உளநல மருத்துவமனைக்கு அளிப்பதனை கல்யாண ஒழுங்குசெய்தது.

    மேலதிகமாக 30 படுக்கைகளும் ஏனைய மருத்துவ உபகரணங்களும் நன்கொடையாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை டயஸ்போராவுடன் இணைந்து கல்யாண ஒழுங்கு செய்துகொண்டுருக்கின்றது.அவுஸ்திரேலியா நாட்டில் இருந்து நன்கொடைகள் அனுப்பப்படும் நன்கொடை உபகரணங்களுக்கு கல்யாணவினால் உள்ளூர் அனுமதிகளை பெற்றுக்கொள்ளல் தொடர்பான செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் மேற்கொள்ளப்படும்.

  • பெப்ரவரி 2020 - வார்டு 59, தேசிய மருத்துவமனையின் கழிப்பறைகள் திருத்த வேலைத்திட்டம்

    தேசிய மருத்துவமனை விடுதி இல. 59 இன் தலைமை வைத்தியர் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் மதுபாஷிணி தயாபண்டார அவர்களுடன்மேற்கொண்ட கலந்துரையாடலின் விளைவாக கல்யாணவினால் தேசிய மருத்துவமனையின் ஆண்களின் கழிப்பறை சீரமைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

    இதற்காக அரசின் அனுமதி பெற்றுக்கொண்டதுடன் இவ்வேலைத்திட்டம் பெப்ரவரி 2021 இல் நிறைவடைந்தது. இந்த வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவாகிய ரூபா 1,195,000 இல் எம்மால் ஏறத்தாழ ரூபா 845,000 அளிக்கப்பட்டது. 

  • பெப்ரவரி – அக்டோபர் 2020 - தம்ரிவி அமைப்புடன் ஒன்றிணைந்து உளவியல் ஆலோசகர்களை பயிற்றுவித்த

    உளவியல் ஆலோசகர்களுக்கு தம்ரிவி அமைப்பில் பயிற்சிபெற தேவையான புலமைப்பரிசில்கள் கல்யாணவினால் வழங்கப்பட்டன.

    கல்யாணவின் நிறுவனர் அமேந்திர அவர்கள் தம்ரிவி அமைப்புடன் 2020 பெப்ரவரியில் மேற்கொண்ட கலந்துரையாடலின் விளைவாக அவர்கள் உளவியல் மேம்பாட்டிற்க்காக செய்யும் செயற்திட்டங்கள் தொடர்பாக கண்டறியப்பட்டது. தம்ரிவி அமைப்பு உளவியல் ஆலோசகர்களை பயிற்றுவிக்கும் 6 மாத கால பயிற்சி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது. ஒருவர் ஒரு பயிற்சி வகுப்பிற்கு ரூபா 60000 செலவிடல் வேண்டும். இவ்வாறான 6 புலமைப்பரிசில்கள் 2020 பெப்ரவரியிலும் 4 புலமைப்பரிசில்கள் 2021 மார்ச்சில் கல்யாணவினால் வழங்கப்பட்டன.

  • ஜூன் 1, 2020 - கல்யாண இன்ஸ்டாகிராம் கணக்கின் முதலாம் கட்ட வேலைகள் ஆரம்பம்

    கல்யாணவின்  இன்ஸ்டாகிராம் கணக்கு  – @kalyanaslorg. 

     

    இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதன் குறிக்கோள்கள் –

    சமூகத்தில் உளநல சுகாதாரம் தொடர்பான கருத்து பரிமாறலை ஊக்குவித்தல், இது தொடர்பாக உள்ள களங்கத்தை ஒழித்தல், விழிப்புணர்வை ஏற்படுத்தல் 

    மக்களிடையே தங்களது உளநலம் மேம்பாட்டின் முக்கியத்துவம் தொடர்பான ஆர்வத்தை ஏற்படுத்துதல் 

    பொதுமக்களுக்கு தங்களது உளவியல் மேம்பாப்படை உறுதிசெய்துகொள்ள அவசியமான கருவிகளை வழங்குதல் 

    அனைவருக்கும் தங்களது உளநலம் தொடர்பான கருத்துகளை பரிமாற  இடமளித்தல் 

    வாராந்தம் உளநலம் தொடர்பான கருத்துருவாக்கங்களை பகிர்ந்துகொள்ளல்

    தனிமையாக இருக்கும் யாரேனும் மற்றயவருடன் அறிமுகம் செய்து தனிமையை போக்க வழி வகுக்கும் ஊடகமாதல்

  • செப்டெம்பர் 2020 - முழுநேர பணிக்குழு ஒன்றை தாபித்தல்

    சமூக வலைத்தள ஊடகங்களை கையாளவும் வெளிநபர் தொடர்புகளை கொண்டுசெல்லவும் மூவர் அடங்கிய குழாம் ஒன்று முதலாவது முறையாக முழுநேர பணியமர்ப்பு செய்யப்பட்டது

  • அக்டோபர் 10, 2020 - விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முதலாவது நேரடி கலந்துரையாடல்

    உளரீதியான நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு வாரத்தை கௌரவிக்கும் முகமாக கல்யாணவினால் நேரடி கலந்துரையாடலொன்று ஒழுங்கு செய்யப்பட்டது 

    தங்களது உளநல கோளாறுகள் மற்றும் தாங்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை பகிர்ந்துகொள்ளும் விதத்தில் கலைஞர்களை உபயோகித்து இன்ஸ்டாகிராம் நேரடி கலந்துரையாடல் ஒழுங்குசெய்யப்பட்டது 

    தங்களையும் தங்களது பின்னணி கதையையும் வெளிக்கொணரும் விதத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆக்கமொன்றையும் கலைஞர்கள் செய்து காட்டினர்.

    இந்நேரடி கலந்துரையாடலின் மூலம் கல்யாணவின் குறிக்கோளிற்கு ஒவ்வும் ஏனையோரை கவர்ந்துகொள்ளவும் இது தொடர்பான ஆர்வமுள்ளோரின் சமூகமொன்றை கண்டறியவும் முடிந்தது.

  • ஏப்ரல் 19இ 2021 எங்கள் சமூக ஊடக எல்லை மறுசீரமைப்பு

  • ஆகஸ்ட் 13இ 2021 கல்யாணாவின் முதலாவது டிஜிட்டல் சித்திரப் போட்டியின் ஆரம்பம்

  • செப்டெம்பர் 2021 யுழுனு நல்வாழ்வு சார் நிகழ்வு

    Official launch of Kalyana website with the goal of being a trilingual resource platform for mental well-being.

  • செப்டெம்பர் 2021 AOD யுழுனு நல்வாழ்வு சார் நிகழ்வு

    கல்யாணா மற்றும் AOD யுழுனு ஆனது AOD யுழுனு மாணவர்களுக்கு தொற்று நோயின் தாக்கத்தை ஆராயும் தொடர் வெபினார்களை (webinars) நடாத்தியது.

    சமூக தனிமைப்படுத்தல்இ குறைந்த மன உறுதிஇ அடையாள நெருக்கடிகள் இ பதிய கற்றல் முன்னுதாரணத்தின் சவால்கள் இ உற்பத்தித் திறன் வீழ்ச்சி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு அடிமையாதல் போன்ற விடயங்களை உள்ளடக்கி விஷ்வர் சுவாமிநாதனினால் நிர்வகிக்கப்பட்டு உள நல நிபுணர்கள் குழுவுடன் இணைந்து ஆழமான கலந்துரையாடாக இது மேற்கொள்ளப்பட்டது: அதில் ஷனெல் டி அல்மெய்டாஇ டாக்டர். சிந்தா திசாநாயக்க மற்றும் டாக்டர். தேவக வனிகரத்ன ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

  • ஒக்டோபர் 2021 விஷியுடன் மனம் முக்கியமானது

    மதிப்பீட்டாளர் விஷ்வர் சுவாமிநாதனுடன் கல்யாணா ஒரு நேரடி இன்ஸ்டாகிராம் நிகழ்ச்சிகளின் முத்தொடரைத் தொடங்கியது.

    அத்தியாயங்கள் தொழில் வல்லுனர்கள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்கள் என்பவர்களுடன் தொற்று நோய்களின் போது சமூக தனிமைப்படுத்தல்இ தொழில்-வாழ்க்கை சமநிலை மற்றும் உறவுகள் என்பவை தொடர்பில் ஆராயப்பட்டது.

  • டிசம்பர் 4இ 2021 மன அழுத்தம் மற்றும் நேர முகாமைத்துவ வலைப் பயிற்சி (வெபினார்)

    கல்யாணா மன அழுத்தம் மற்றும் நேர முகாமைத்துவம் தொடர்பான ஒரு வலைப் பயிற்சியினை டாக்டர். சிந்தா திசாநாயக்க மற்றும் ஷனெல் டி அல்மெய்டா என்பவர்களுடன் இணைந்து நடாத்தியது. அது இலங்கை சட்ட மாணவர்கள் சங்கத்தின் மாணவர் அமைப்பிற்காக நடாத்தப்பட்டது.

    அவ் வெபினார் ஆனது தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மாணவர்களுக்கு அவர்களின் புதிய உண்மையான அமைப்பிற்குள் சிறந்த முறையில் கவனம் செலுத்தும் மனநிலை மற்றும் குறைவான மனத் திசை திரும்புதல் என்பவற்றுடன் மாற்றியமைக்க உதவுகின்றமையில் கவனம் செலுத்தப்பட்டது.

     

  • ஜனவரி 20இ 2022 ஆரோக்கிய பொப்-அப் கண்காட்சி RESET 2022

    உள்ளுர் சமூகம் அவர்களின் மன நலனை மேம்படுத்த பல்வேறு சிகிச்சை முறைகளை ஆராய்வதற்காக கல்யாணா ஒரு ஆரோக்கிய பொப்-அப் கண்காட்சியை நடாத்தியது.

  • ஜனவரி 20இ 2022 கல்யாணா வலைப்பதிவு ஆரம்பம்

    ஜனவரி 20இ 2022 அன்று கல்யாணா தனது இணையத்தளத்தில் தனது சொந்த வலைப்பதிவை ஆரம்பித்தது. அவ் வலைப்பதிவு தொழில் வல்லுனர்கள் மற்றும் எழுத்தாளர்களால் உள ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான விடயங்களை மையமாகக் கொண்டமைந்தது.

  • ஜுன் 25இ 2022 ஆதரவு வரிசைப் பயிற்சி (Support Line Training)

    கல்யாணாவின் ஆதரவு வரிசைப் பயிற்சி சேவையைத் தொடங்குவதற்கான ஆயத்தத்தில் நடத்தப்பட்ட இரு மடங்கு பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகஇ கல்யாணா அதன் முதல் PFA (Psychological first aid – உளவியல் முதலுதவி) பயிற்சி அமர்வை நடாத்தியது.

    CCC line 1333

    இன் முன்னால் முகாமையாளர் ரணில் திலகரத்னவினால் ஜுன் 25 ஆம் திகதி சனிக்கிழமை இவ் அமர்வு நடாத்தப்பட்டது.

    இது உளவியல் முதலுதவியின் அடிப்படைகளை உள்ளடக்கியதுஇ பல்வேறு சந்தர்ப்பங்களில் துன்பகரமான அழைப்பாளர்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது பற்றி பங்கேற்பாளர்களுக்கு கற்பிக்கப்பட்டது.

     

  • ஜுன் 2022 YAC உடனான இலவச நிகழ்நிலை ஆலோசணை ஒத்துழைப்பு

    கல்யாணா ஒரு இலவச நிகழ்நிலை ஆலோசனை சேவையை ஆரம்பிக்கிறதுஇ நடைமுறையிலுள்ள பொருளாதார சிக்கல்களால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உள ரீதியாக ஆதரவு வழங்க 10 பயிற்சிபெற்ற மன நல பயிற்சியாளர்கள் தமது வாராந்த நேரத்தில் 20 இற்கும் மேற்பட்ட மணித்தியாலங்களை ஒதுக்கி இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

    பொது மக்களிடையே சேவையை மேம்படுத்துவதற்காக ஒரு மும்மொழி சமூக ஊடக பிரச்சாரம் நடாத்தப்பட்டது.