பொறுப்பு துறத்தல்

Spread the love

இந்த வலைத்தளமானது எந்தவொரு நிபுணத்துவம்  வாய்ந்த உளநல சிகிச்சைகளையோ அல்லது எந்தவிதமான உளநல  ஆலோசனை சேவைகளையோ வழங்குவதில்லை. உங்கள் பிரதேசத்தில்  இயங்கிவரும் உள நல  சேவை வழங்குனர்கள் அல்லது  உளநல நிபுணர்களிடமிருந்து உங்களுக்கும் உங்களது  அன்பானவர்களுக்குமான  சிகிச்சைகளையும்  ஆலோசனைகளையும்  பெற்றுக்கொள்ளுங்கள். எமது வலைத்தளம் மற்றும் பிலொக் (Blog)  ஆகியவற்றின் பிரதான நோக்கம் இலங்கையில் நடைமுறையிலுள்ள பல்வேறுபட்ட உளநலம் சார்ந்த வளங்கள் மற்றும் உதவி வழிகாட்டுதல்கள்  தொடர்பில் எமது பயனர்களுக்கு வழிகாட்டுவதே ஆகும்.  கல்யாண இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்கள் ஒரு போதும் ஒரு உளவியல் நிபுணரால்,  உள நல ஆலோசகரால்,  வைத்தியரால், அனுமதிபெற்ற ஊட்டச்சத்து  தொடர்பான நிபுணர்களால் அல்லது எனைய அனுமதிபெற்ற சுகாதார சேவை வழங்குனரின் நிபுணத்துவம் வாய்ந்த உளநல  ஆலோசனைக்கான மாற்றீடோ,  நோயை அடையாளம் காணலோ அல்லது சிகிச்சை முறையோ அல்ல. உங்களுக்கு உங்களது உளநலம் தொடர்பில் ஏதேனும்  ​அறிந்துகொள்ளவேண்டிய  தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் அல்லது எமது வலைதளத்தில் காணப்படும் ஏதேனும் ஒரு விடயத்தை  நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் உங்களது தனிப்பட்ட  உளநல நிபுணர் அல்லது சேவை வழங்குனர்களை நாடவும். உங்கள் மருத்துவரின் முன் அனுமதியில்லாமல் எந்தவொரு மருந்துகளையும் உட்கொள்வதை நீங்கள் நிறுத்த  வேண்டாம். உங்களுக்கு உங்களது உளநலம்  தொடர்பில் ஏதேனும்  பிரச்சினைகள் காணப்பட்டாலோ அல்லது அவ்வாறு காணப்படுவதாக நீங்கள் எண்ணினாலோ உடனடியாக உங்களது தனிப்பட்ட உளநல மருத்துவரை நாடுங்கள்.

நோய்களை கண்டறிதல் அவற்றை  குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள்  தொடர்பான விபரங்கள் எம்மால் வழங்கப்படமாட்டாது. ஆகவே எந்தவொரு உளநலம் சார் பிரச்சினைகள் உங்களுக்கு எழுந்தாழும் அது  தொடர்பில் எமது வலை தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உளநல அவசர அழைப்பு பிரிவுக்கு அழைப்பை எடுத்து உரையாடுவதன் மூலமோ அல்லது உடனடியாக உளவியல் நிபுணர் ஒருவரை நாடி ஆலோசனை  பெறுவதன் மூலமோ உங்களுக்கான தீர்வினை  நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

சாட்  பொக்ஸ் (Chat Box)

“யான” ஒரு நிபுணத்துவம்  பெற்ற உளவியல் நிபுணருக்கான மாற்றீடல்ல. உங்களை உரிய  உளவியல் நிபுணத்துவம்  தொடர்பான வளத்தினை அடையாளம் காண உதவியளிக்கும் ஒரு உதவியகம் ஆகும். உங்களுக்கு நோயினை அடையாம்காணவோ அதனை குணப்படுத்தவோ “யான” உதவாது. இக்கட்டான அல்லது நெருக்கடியான சூழ்நிலைகளில் ஆலோசனைகளை வழங்கும் வகையில் “யான” வடிவமைக்கப்படவில்லை. ஆகவே தற்கொலை எண்ணம் போன்ற பாரதூரமான எண்ணங்கள் காணப்படும் ஒரு நபர் யானவினால் உரிய பிரிவுக்கு திசைமுகப்படுத்தப்படுவார். அவ்வாறு யானவியால் திசைமுகப்படுத்தப்பட்ட பின்னர் உரிய வளத்திற்கும் நபருக்கும் இடையில் இடம்பெறும்  விடயங்கள்  தொடர்பில் “யான”  பொறுப்பேற்காது.

நீங்கள் 18 வயதுக்கு உட்பட்டவர் என்றால் யானவுடன் உரையாடலை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் உங்களுடைய  பெற்றோர் அல்லது பாதுகாவரின் உளவியுடன் அவர்களது பிரசன்னத்துடன் அந்த உரையாடலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்

உங்களுக்கு அவசர உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில்  உங்களது உள்ளுர் அவசர இலக்கத்திற்கோ அல்லது எமது வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உளநல அவசர அழைப்புச்சேவைக்கோ அழபை்பினை ஏற்படுத்தவும்.

பிலொக் (Blog)

கல்யான பிலொக் ஆனது தகவல் வழங்குவதற்காகவும் கற்றல் நடவடிக்கைகளுக்காகவும் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஒரு பிலொக் (Blog) ஆகும். அது எந்தவிதமான சிகிச்சைகளையும் அளிப்பதாக நீங்கள் கருதக்கூடாது. இந்த பிலொக் ஆனது உங்களது உளநல மேம்பாடு  தொடர்பிலான சிறுகதைகளை பதிவிடுவதற்கும் அனுபவங்களை பதிவிடுவதற்குமான ஒரு பாதுகாப்பான தளம் ஆகும். தனிப்பட்ட விடயங்கள் தொடர்பான  கேள்விகள், அது  தொடர்பான கருத்துக்கள் தொடர்பில் எம்மால்  தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட மாட்டாது. மேலும் முறையான சிகிச்சை அல்லது சிகிச்சை  தொடர்கான கருத்துக்கள் அல்லது  யோசனைகள் எம்மால் வழங்கப்படமாட்டாது.  இது ஒரு  நோயை குணமாக்குவதற்கான கருவியோ, இடமோ அல்ல. பிலொக்கில் பதிவிடப்பட்டிருக்கும் ஏதேனும் விடயங்களை பயனர்கள் பின்பற்றுவது தொடர்பில் கல்யாண பொறுப்பினை ஏற்காது. இந்த தளத்தில் பதிவிடப்பட்டிருக்கும் அனைத்து விடயங்களும் தனிப்பட்ட அனுபவத்தைச்  சார்ந்தது. அது குறித்த பதிவை முன்வைத்தருக்கு உரித்தானது. குறிப்பாக  வௌிப்படுத்தாதவிடத்து, அவர்கள் கல்யாணவுடன் நேரடியான தொடர்புகளை பேணுபவர்களாகவோ அல்லது பேணாதவர்களாகவோ காணப்படலாம். மேலும் அவர்கள் ஏதேனும் நிறுவனத்தையோ, நபர்களையோ பிரதிநிதித்துவப்படுத்தாதவர்களாகவே  கருதப்படுவர். ஆகவே உங்களுக்கு ஏற்படும் உளநலம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு உரியவாறு உளநல நிபுணர் ஒருவரை அணுகி சிகிச்சையினை  பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகின்றீர்கள். இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிகிச்சை முறைகள் உங்களுக்கு உங்களது உளநல நிபுணரால் வழங்கப்படும் சிகிச்சைக்கு மாற்றீடல்ல. இந்த தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களை அடிப்படையாகக்கொண்டு உங்களது சிகிச்சைகளை தாமதிக்க வேண்டாம். இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள், கூற்றுக்கள், விடயங்கள் எந்தவொரு சிறுபான்மையினரையும் பாதிக்கும் நோக்கில் உருவாக்கப்படவில்லை, அவர்களது சமயம், கலாசாரம. பண்பாடு, அரசியல் போன்ற விடயங்களை சுட்டிக்காட்டுவனவாக அமையாது. இந்த தளத்தில் பதிவிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் தகவல்களுக்காக மாத்திரமே பதிவிடப்படுகின்றன. இத்தளத்தில் காணப்படும் விடயங்களின் பூரணத்தன்மை அல்லது சரியான தன்மை    தொடர்பில் கல்யாண எந்தவிதமான  பொறுப்புக்கூறலுக்கும் உட்படவில்லை. 

உங்களுக்கு அவசர ஆலோசனைகளோ சிகிச்சைகளோ தேவைப்பட்டால் அது  தொடர்பில் உங்கள் பிரதேசத்திலுள்ள உளநல மருத்துவரை அணுகி முறையான சிகிச்சைகளை  பெற்றுக்கொள்ளுமாறும் அல்லது எமது வலைதளத்தில் காணப்படும் உளநல அவசர சேவை பிரிவுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தொடர்புகொள்ளுமாறு  வலியுறுத்தப்படுகின்றீர்கள். மேலும் அது  தொடர்பில் நிபுணத்துவர்களின் பட்டியல்  கோவை பகுதிக்கு  சென்று அங்கு பட்டியல் இடப்பட்டிருக்கும் உங்கள் பிரதேசத்தைச் சார்ந்த உளநல நிபுணர்கள் தொடர்பிலும் நீங்கள் தகவல்களை அறிந்துகொள்ளலாம். 

மேற்பார்வை/ வளங்கள் தொடர்பான பக்கம்

உளநல தன்மை தொடர்பான படிவமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட சிகிச்சைகள் தொடர்பில் பயன்படுத்தப்படக்கூடாது.  உளநல தன்மை தொடர்பான படிவமானது முற்றாக தகவல்களை அறிந்துகொள்வதற்காகவும் கற்றல் நடவடிக்கைகளுக்காகவும் மாத்திரமே பயன்படுத்தப்படவேண்டும் மாறாக எந்தவொரு தனிப்பட்ட சிகிச்சைகளுக்காகவும் அவை பயன்படுத்தப்படக்கூடாது. நீங்களோ அல்லது உங்களுக்கு  நெருக்கமானவர்களோ ஏதேனும் உளநலம் சார் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக நீங்கள் கருதினால் அது தொடர்பில் நீங்கள் ஒரு உளநல நிபுணரை சந்தித்தலே மிகவும் பொருத்தமானது.  மேலும் எமது விபரங்கள் பகுதியில்  அவ்வாறான உளநல நிபுணர்களின், ஆலோசகர்களின்  விபரங்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.  அவ்வாறு தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில்  கல்யாண எந்தவொரு  பொறுப்பையும் ஏற்காது.

ஆலோசகர்களின் விபரங்கள்

கல்யாண அமைப்பினரான நாம் எமது வலைதளத்தில் உளநல நிபுணர்களின் பெயர்களை பட்டியலிடும் சந்தர்ப்பங்களில் மிகவும் கவனத்துடன் செயற்பட்டு மிகவும் சிறந்த உளநல நிபுணர்கள், ஆலோசகர்களை பட்டியலிட்டுள்ளோம். எமது வலைதளத்தில்  பெயர் இடம்பெற்றுள்ள நிபுணர்கள் தொடர்பில் ஆராயும்  பொருட்டு அவர்களை சில வகைபபடுத்தல்களுக்கமைய பட்டியலிட்டு சிறப்பானவர்களின் பெயர்களை நாம் பட்டியலிட்டுள்ளோம். அதாவது அவர்களது  தொழிற்சார் தகமைகள், அனுபவம், இலங்கை நாட்டில்  கொண்டுள்ள சேவை அனுபவம். விழுமியக் நெறிமுறைகளுக்கு அமைய ஒழுகும் தன்மை போன்றன. சேவை பெறுனருக்கும் உளநல ஆலோசகருக்கும் இடையில் இடம்பெறும் கலந்துரையாடல்கள் அல்லது சிகிச்சைகள் தொடர்பில் கல்யாண எந்தவொரு பொறுப்பையும் ஏற்காது. எமது வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து உள நல நிபுணர்களும் சுயாதீனமாக இயங்குபவர்கள், கல்யாணவிற்கும் அவர்களுக்கும் இடையில் எந்தவொரு நிதி ரீதியான கொடுக்கல்வாங்கல்கள் காணப்படவில்லை. எமது வலைதளத்தில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள அனைத்து உளநல ஆலோசகர்களும் திறன்வாய்ந்தவர்கள் ஆவர்.

மாற்றீடான சிகிச்சையளிப்பவர்களின் பட்டியல்

மாற்றீடான சிகிச்சையளிப்பவர்களின் பட்டியலில் சிகிச்சையளிப்பவர்கள் உள்வாங்கப்படும் சந்தர்ப்பங்களில் மிகவும் கவனத்துடன் செயற்பட்டு மிகவும் சிறந்த உளநல சிகிச்சையளிப்பவர்களை கல்யாண தெரிவுசெய்து பட்டியலிட்டுள்ளது.  எமது வலைதளத்தில்  பெயர் இடம்பெற்றுள்ள சிகிச்சையளிப்பவர்கள் இலங்கையில் உளநலம் சார் சிகிச்சையளிப்பவர்களாக  செயற்படும் திறன்வாய்ந்தவர்கள் ஆவதுடன் சேவைபெறுனருக்கும் உளநல சிகிச்சையளிப்பவர்களுக்கும் இடையில் இடம்பெறும் கலந்துரையாடல்கள் அல்லது சிகிச்சைகள் தொடர்பில் கல்யாண எந்தவொரு பொறுப்பும் ஏற்காது. நீங்களோ அல்லது உங்களுக்கு  நெருக்கமானவர்களோ ஏதேனும் உளநலம் சார் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக நீங்கள் கருதினால் அது தொடர்பில் நீங்கள் ஒரு உளநல நிபுணரை சந்தித்தலே மிகவும் பொருத்தமானது. எமது வலைதளத்தில் காணப்படும் உளநல அவசர சேவை பிரிவுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தொடர்புகொள்ளுமாறு  வலியுறுத்தப்படுகின்றீர்கள்.

சிகிச்சையளிப்பவர்கள்  பட்டியல்

கல்யாண அமைப்பின் சிகிச்சையளிப்பவர்கள்  தொடர்பான தகவல் படிவமானது இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட உளநல வைத்திய நிபுணர்கள், ஆலோசகர்கள், சிகிச்சையளிப்பவர்கள்  தொடர்பான விபரங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த பட்டியலில்  பெயரிடப்பட்டுள்ள எந்தவொரு  சேவை வழங்குனரின் சேவை தொடர்பில்  மேற்பார்வை  செய்தல், சிபாரிசு செய்தல் போன்ற செயற்பாடுகளை கல்யாண மேற்கொள்ளாது. இந்த பட்டியலில் ஒரு  சேவை வழங்குனரை தெரிவுசெய்வது ஒருவரின் தனிப்பட்ட அபிப்பிராயமாவதுடன் அவ்வாறு தெரிவுசெய்யப்படும் நியுணர் ஒருவர் மூலம் பெற்றுக்கொள்ளப்படும்  சேவை  தொடர்பில் கல்யாண எவ்விதத்திலும்  பொறுப்புகூறலுக்கு உட்படாது.  மேலே  சொல்லப்பட்ட அனைத்து விடயங்களும்  சேவை வழங்குனராலேயே வழங்கப்படுவதால் கல்யாண அவை தொடர்பில்  பொறுப்பு கூற கட்டுப்படவில்லை. மேலே உள்ள அனைத்து தகவல்களும் வழங்குநரால் வழங்கப்படுகின்றன, அவர்கள் பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு முன்னர் APA நெறிமுறைகளை மீறும் தவறான, மோசடியான, தவறாக வழிநடத்தும் அல்லது ஏமாற்றும் ஒரு  செயற்பாட்டில் ஈடுவடுவதில்லை என உறுதியளித்துள்ளதுடன் அவ்வாறான உறுதியளித்தல் தொடர்பான விபரங்கள் வலைத்தளத்தில் இடம்பெறவில்லை.

வழங்குநர் தனது மின்னஞ்சல் மற்றும்/அல்லது இணையதளத்திற்கு “இணைப்புகளை” (Links) வழங்கலாம். கல்யாணா குறித்த இணைப்புக்களை பயனர்களின் வசதிக்காக வழங்குகிறது, மேலும் இந்த தளங்களின் துல்லியம் குறித்த உத்தரவாதங்கள் அல்லது பிரதிநிதித்துவங்களை அங்கீகரிக்கவோ, சான்றளிக்கவோ அவை பதிவிடப்படவில்லை. பயனர்கள் எச்சரிக்கையுடன் மின்னஞ்சலைப் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் மின்னஞ்சல் செய்திகளை உத்தேசித்துள்ள பெறுநரைத் தவிர வேறு நபர்கள் பார்க்கக்கூடும். இந்தத் தேடலில் பட்டியலிடப்பட்டுள்ள சேவை வழங்குநரிடமிருந்து கிடைக்கும் தகவல் அல்லது அதன் விளைவாக வரும் சேவைகள் தொடர்பான எந்த உத்தரவாதத்தையும் கல்யாணவினால் வழங்க முடியாது.

உங்களுக்கு உடனடி உதவி தேவை என நீங்கள் நினைத்தால், உங்கள் உள்ளூர் அவசர எண்ணை அல்லது எங்கள் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள உளநல நெருக்கடி அவசர அழைப்பு எண்னை அழைத்து தொடர்பு  கொள்ளவும்.

சமூக ஆதரவு

ஒரு தனிநபரின் உடனடி உளநலத் தேவைகளுக்கு அவசியமான சமூக வளங்களை சேகரிப்பதில் கல்யாணா மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுகின்றது. வளப்பட்டியல் தகவல்கள் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே காணப்படுகின்றது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவும். எங்களது வளப் பட்டியல்களை பதிவேற்றுவதற்கும், எங்களது தகவல் புதுப்பிக்கப்பட்டு துல்லியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் கல்யாணா பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. வழங்கப்பட்ட சேவையின் நம்பகத்தன்மை அல்லது அதன் பூரணத்தன்மைக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை. உங்களுக்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் மீது நீங்கள் வைத்திருக்கும் எந்தவொரு நம்பிக்கையும் கண்டிப்பாக உங்கள் தனிப்பட்ட இடர் நேர்வுக்கு உட்பட்டதாகவே கருதப்படும். எவ்வித வரையறைக்கும் உட்படாமல், மறைமுகமான அல்லது நேரடியான எந்தவொரு இழப்புகளுக்கும் அல்லது சேதங்களுக்கும் கல்யாண பொறுப்பேற்காது. எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சிக்கல்களுக்கு சேவை கிடைக்காமல் போனால் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.

உங்களுக்கு உடனடி உதவி தேவை என நீங்கள் எண்ணினால், உங்கள் உள்ளூர் அவசர எண்ணை அல்லது எங்கள் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள உளநல நெருக்கடி அவசர அழைப்பு எண்னை  அழைக்கவும்.

ஆன்லைன் வளங்கள்

கல்யாணவினால் தொகுக்கப்பட்டுள்ள ஆன்லைன் ஆதாரங்கள் எந்தச் சூழ்நிலையிலும் சுயகுணப்படுத்தல் கருவியாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும். ஆன்லைன் பதிவுகளானது தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். உங்களுக்கோ அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுக்கோ உள ஆரோக்கியத்திற்கான ஆதரவு தேவைப்படலாம் என நீங்கள் எண்ணினால், ஒரு உளநலம் சார் நிபுணரிடம் பேசுவது சிறந்தது, உங்களுக்கு  பொருத்ததமான உளநல மருத்துவர், உளவியலாளர் அல்லது ஆலோசகரைக் கண்டறிய எங்கள் சிகிச்சையாளர்கள் பட்டியலை பயன்படுத்தவும்.

பதிவுகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு சுய குணப்படுத்தலுக்கும் கல்யாண பொறுப்பேற்காது. 

வளங்கள் வரைபடம்

கல்யாண வள வரைபடம் நாடு முழுவதும் உள்ள பல உளநலச் சேவைகளின் விபரங்களை உள்ளடக்கியுள்ளது. இந்தப் பகுதியானது நாடு முழுவதும் உள்ள பல்வேறு உளநலம் சார் சேவைகளை எளிதாகக் கண்டறிய உங்களுக்கு உதவுகின்றது.

எளிதில் கிடைக்கக்கூடிய வளங்களின் பட்டியலை கல்யாணா கவனமாக சேகரித்து தொகுத்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள இந்த மையங்களினால் உடனடியாக வழங்கப்படும் நம்பகத்தன்மையான சேவைகளின் அடிப்படையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவதில் கல்யாணா தன்னால் முடிந்தவற்றைச் செய்துள்ளது. இருப்பினும், ஒரு மையத்திற்கும் தனிநபருக்கும் இடையிலான தொடர்புகளுக்கு நாங்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டோம். வளங்கள் தொடர்பான பட்டியல் எந்த வகையிலும் நாடு முழுவதும் உள்ள பயிற்சியாளர்களின் முழுமையான ஆதார வழிகாட்டி அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.

உங்களுக்கு உடனடி உதவி தேவை என நீங்கள் நினைத்தால், உங்கள் உள்ளூர் அவசர எண்ணை அல்லது எங்கள் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள உளநல அவசர அழைப்பு எண்னை அழைத்து தொடர்பு கொள்ளவும்..

நிகழ்வு நாட்காட்டி

கல்யாண நிகழ்வு நாட்காட்டி உலகம் முழுவதும் இடம்பெறும் உளநலத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. இந்த நாட்காட்டி கல்வி மற்றும் தகவல் தொடர்பான பதிவேற்றங்கள் (Posts), சார்பாக மாத்திரமே காணப்படவேண்டியதுடன் இது விளம்பரம் அல்லது சுய விளம்பரங்களுக்காக அல்ல. உதாரணமாக நிகழ்வுகள், போட்டிகள், கருத்தரங்குகள், விவாதங்கள் போன்றவை மாத்திரமே பதிவேற்றப்பட வேண்டும். 

வெவ்வேறு அமைப்பாளர்கள் நடாத்தும் பக்க நிகழ்வுகள் பற்றிய தகவல்களை அணுகும் நோக்கத்திற்காக நிகழ்வுகளைக் கண்காணிக்க நிகழ்வு நாட்காட்டி உதவுகிறது. நிகழ்வு நாட்காட்டி என்பது உலகம் முழுவதிலும் நடக்கும் நிகழ்வுகளைக் காண்பிக்கும் நோக்கத்திற்காகவும், அமைப்பாளர்கள் அல்லது/மற்றும் நிகழ்வுகளின் நேரடி ஒப்புதலாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டியதில்லை. அதன் உள்ளடக்கமானது கல்யாணவினால் உறுதியளிக்கப்பட்ட உள்டக்கமாக அமையப்பெறாது.

எங்கள் வளப் பட்டியலை புதுப்பித்தல் தொடர்பில் கல்யாணா மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறது அதே வேளை எந்த வடிவத்திலும் மற்றும்/அல்லது எழுதப்பட்ட உரையின் துல்லியம், நம்பகத்தன்மை, பயன், பார்வைகளின் முழுமை, கருத்து, அறிக்கைகள் ஆகியவற்றையும் காட்டப்படும் நிகழ்வுகளில் வழங்கப்படும்/விநியோகிக்கப்படும் வேறு ஏதேனும் தகவல் தொடர்பிலும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என்பதையும் கல்யாணா மேலும் தெரிவிக்க விரும்புகிறது.