எங்கள் இலக்கு
– நாங்கள் சமூக மாற்றத்திற்காக உழைப்பவர்கள்
– ஒருவரின் உளநல ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள்
நம்புகிறோம்.
– நாங்கள் உளநல சமத்துவம் மற்றும் அவர்களது அனைத்து சமூகமட்ட அணுகுதல்களையும்
ஆதரிக்கின்றோம்.
– உளநலத்திற்காக சமூக ஆதரவு மற்றும் பரிந்துரைக்கும் ஆர்வமுள்ள சமூகத்தை
கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நாம் நம்புகின்றோம்.
– தனிநபர்கள், பேசுவதன் மூலமும் அனுபவப்பகிர்வினை பகிர்ந்து கொள்வதன் மூலமும்
தன்னம்பிக்கையையும் விழிப்புணர்வையும் பெறுவார்கள் என நாங்கள் நம்புகின்றோம்.
– புறக்கணிப்பினை நீக்கும் முகமாக உளநலத்திற்கான நேர்மறையான மனப்பாங்கினை
ஊக்குவிக்கும் நோக்கத்துடன் உள ஆரோக்கியம் தொடர்பான திறந்த உரையாடல்களில்
பங்குகொள்வதற்கான மனப்பாங்கினை நாம் வளர்க்க விரும்புகின்றோம்.
– மக்கள் உளநல சவால்களால் பாதிக்கப்படும்போது ஏற்ற ஆதரவுடன் சரியானஉதவிகளை
வழங்கும் பட்சத்தில் அவர்களை குணமாக்கக்கூடிய அல்லது மீட்டெடுக்கக்கூடிய வாய்ப்பு
காணப்படுகின்றது என்பதை நாம் நம்புகின்றோம்.
– தேசிய மற்றும் உள்ளூர் மட்டங்களில் அடையாளம் காணப்பட்ட உள நல பிரச்சினைகள்
சவால்கள் தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானங்களை நேர்மறையான பாதிப்பினை
ஏற்படுத்துவதற்காக நாங்கள் சாதகமான முறையில் ஈடுபடுகின்றோம்
– நாங்கள் சிந்தனைமிக்க, அக்கறையுள்ள சேவை வழங்குநர்.